July 01, 2010

பழம்பெரும் பழங்கள்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடிகளைக் கெடுத்தன சில பழங்கள். ஏதேன் தோட்டத்தில் அம்மணமாய்த் திரிந்து கொண்டிருந்த ஏவாளை அம்மாவாக்கியது ஒரு ஆப்பிள். கருவுற்று, குழந்தைகள் ஈன்று சீரழிந்த கதைகள் தேவாலயங்களின் ஞாயிற்றுக்கிழமை
நற்செய்திகள். ஹவ்வா என்று பெயர் மட்டும்தான் வேறு. மற்றபடி திருக்குரானின் ஹதீத்துகளில் அதே பழம். அதே பிரச்சனைகள். சிவனேன்னு இருந்த பரமேஸ்வரன்- பார்வதி குடும்பத்தில் மாம்பழம் ஒன்று குண்டு வைத்தது. எலியோடும் மயிலோடும் விளையாடிக்கொண்டிருந்த வினாயக-முருகன் பிரதர்ஸ் எலியும் பூனையுமாய் முறைத்துக்கொண்ட திருவிளையாடல்கள் சினிமா பிரசித்தம். எட்டாத உயரத்தில் பழுத்திருந்த திராட்சைப் பழங்கள் இன்று வரைக்கும் நரிவம்சத்தினருக்கு புளிக்கும்பழம் தான்.

"ஆப்பிள் மில்க் ஷேக் போடலாமா?" என்று கேட்ட கேரளக்கடைகாரரிடம் "லைட்டா ஒரு டீ" என்றேன். எண்டா சேட்டா! புத்தரும் மகாவீரரும் காட்டுக்குப் போனதுக்கு டீயொண்ணும் காரணமில்லையே?

ஏவாள் கடிக்காத
ஆப்பிள் ஒன்று
மரத்திலிருந்து விழுந்தது.

எடுத்துக் கொண்டு ஓடினான்
நியூட்டனின் கொள்ளுப்பேரன்
.