சொல்லுரைத்துக் கழிந்த சனியிரவுகளில்
புல்லரித்த நேசமழையின் நினைவுக்குட்டையில்
கல்லிறைத்துக் காத்திருக்கிறது
நெல்லரைத்துப் பரிமாறும் உண்டியகப் பாதை.
வாரந்தோறும் சனி வரும்
சனியோடு இரவு வரும்
இன்றிரவோடு உங்கள் வரவுறுமா?
< என் சனியிரவுச் சிநேகிதர் பசுபதி வருகிறாரா எனக்கேட்டு, ஒரு சனிக்கிழமையன்று குறுந்தொகை என்ற மிகுநினைப்போடு குறுஞ்செய்தியில் நான் செய்த கவிதை >