July 22, 2010

உள்செய்

செய்யுள்:1

இண்டு இடுக்குகளில் ஒண்டி ஒதுங்கும்
வண்டி நெருக்கத்தில் மனசு புழுங்கும்
ஏசி காரிலும் ஏழை மனம் ஏங்கும்;
நடந்து வந்திருந்தால் கடந்து சென்றிருக்கலாமோ?

செய்யுள்:2

போகுயிர் தருணம் ஆகுமென் நம்பி
கைஒளிர் நயனம் பிணத்திற்கு- தும்பி
கையிலர் களிறு ரணத்திற்கு- எம்பி
கைவளர் போழ்து சனத்திற்கு.

செய்யுள்:3

தடிதொடை இடைகுழி நுழைதடி மயிர்சார்
மூத்திரமலம் அறியுமோ? களிதேடி கண்டகுழிசேர்
நாயெனத் திரியுமோ உயர்பால்? பசிமிகின்
மலம் தின்னுமோ மன்பதை?

மேற்படித்த மூன்று செய்யுள்களின் ஊக்கத்தில் நானெழுதிய இரண்டு செய்யுள்கள் கீழே.

சூழல் :

நண்பனுக்கு தர வேண்டிய பணத்தை Harrison என்பவர் எழுதிய மருத்துவப் புத்தகத்தில் மறைத்துவிட்டு வந்துவிட்டேன். பணமிருக்கும் இடத்தை கேட்டபோது நான் செய்யுளினூடே சமிக்ஞைகள் செய்தேன்.

செய்யுள்: 4

தாளென நோக்கின் இரண்டு மொன்றே
வாழ்விதை நீக்கின் கீழெனச் சென்றே
தெரியும் அறிவு சிறிதே- அதை
அரிமகனுள் அறிவாய் மனமே!

செய்யுள்: 5

பிழை கண்டே கடை நின்றேன்
விழை மனமே துணை கொண்டேன்
உன்னுள் கலந்தே ஈரற ஆனேன்
என்னுள் உறை இறையே!

முதல் மூன்று செய்யுள்களை இயற்றியவர், ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூற்று இருபது நாட்களுக்கு முன்னர், கி.பி. 2005ல் கவிஞர். மணிமகனார் என்றெழுதத் தலைப்படும்போது கனம் கூடுகிறது.

இயல்பென இருந்தேன்
நானென் முனைப்பு
நெஞ்சு நிமிர்த்தியது.

ஒளிக்க விழைந்தேன்
தலை தாழ்த்தி
குழைந்து இளித்தது.

விழிப்பில் வைக்கிறேன்
விளைவதை ஏற்கிறேன்.