November 10, 2014

கருப்பு நிறத்திற்கு காக்கையின் குரல்

இமைகள் மூடினால்
இருளின் ஆழம்
ஆழத்து நிறத்தில்
தலை சாய்த்து
விழி உருட்டி
உறுத்தும் உருவம்
ஒன்று ரெண்டாகி
ரெண்டு மூன்றாகி
காவெனக் கரையும்
o

October 04, 2014

நேர்முகம்

நான்கைந்து இருசக்கர வாகனங்கள் 
வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் 
அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தந்தானே அது

விடைபெற்ற கோடை

வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு 
வெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்

April 30, 2014

அஞ்சலி

ரதபதாதி சேனைகள்
விரைந்து கடக்கும்
நாற்சந்தி தெருமுனையில்

உறைவுயிர்

காய்ந்த மரத்தின்
கிளைகள் மீது
படர்கிற பார்வையில்
உயிர்த்து அசைகின்றன
உறைந்த அபிநயங்கள்.

அந்த நீலம்

மச்சுவீட்டு மதில்மீது
படரும் பசுங்கொடியில்
பூத்திருக்கும் அடர்நீலம்

March 10, 2014

நள்ளிரவின் நீளம்

உறக்கம் கலைந்துவிட்டது
சன்னமாய் அதிரும் பேருந்து உடல்
என்ஜினின் சீரான குறட்டை ஒலி
வழியில் ஏனோ நின்றிருக்கிறது வண்டி.
நேரம்  நள்ளிரவை நெருங்கியிருக்கும்.

என் உறக்கம் உலா போகிறது

சிகரெட்டுப் புகை 
சீக்கிரம் வெளியேற 
பாதி உயர்த்திய 
கழிப்பறைச் சாளரத்து 
வலை வெளியே 
கொசு நுழையவும் 
வெளியேறிய உறக்கம்

February 12, 2014

போதி மரத்தடியில் போலி புத்தர்!

ஓரிலையும்  அசையாத மரத்தினடியில் அமர்ந்தபடி,  கவிஞர்.ராஜா எழுதிய அல்லது எழுதியவற்றுள் 102 கவிதைகள், ஓர் தொகுப்பாக, உயிர்மை பதிப்பகத்தின்மூலம் வெளியாகியுள்ளன .எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் ; தலைப்பிலிருந்தே துவங்கலாம். ஓரிலையும் அசையாத மரம் - காற்றே இல்லையென்றால் சாத்தியம். எங்கிருக்கிறது அது? ஒருவேளை மரச்சிலையோ? என்ன சொல்ல வருகிறார்? கவிராயருக்கே வெளிச்சம். இன்னும் ஆழ அகலத்தில், தலைப்பை ஆராயப் புகுந்தால், மண்டைக்கு  மேற்பரப்பில் மண்டிக்கிடக்கும் விளைச்சலில் ஒருபயிரும் மிஞ்சாது என்ற அக்கறையின்பாற்பட்டு , கவிதைக்குள் செல்லலாம் இனி. 

January 03, 2014

கவிராயர் எழுதிய வாக்குமூலம்

தன் மனைமாட்சியை 
இருகரங்களால் அள்ளி 
தூக்கமுயன்று தோற்றுப்போய்