August 30, 2010

தமிழ்க் கணக்கு



கூட்டலும் பெருக்கலும்
கணிதத்தின் அடிப்படை இயக்கங்களாம்.

உயிர் மெய் எழுத்து

August 29, 2010

கணக்கு



அறையை கூட்டிப் பெருக்கி
சிறுநீர் கழித்துவிட்டு
வந்தமர்ந்தேன்.

August 28, 2010

தூதொடு வந்த மழை




ஆநிரை இரையும்  ஒலிகேட்டு- மலையிடை
மேவும் மேகத் துளிபட்டு- துடியிடை
மயிலும் அகவ -ஒளிகெட்டு வடிவிடை
அழகும் துயில் எழும்.

August 27, 2010

தூதொடு வந்த மழை

கல்லும் கலையும்

கல்லெனக் கண்டாரும் கலையிலே கரைகண்டால்கல்லும் கரைந்து குழைந்திடாதோ- இலையெனில்
கொண்ட கலையில் உண்டு பிழையோ?
கலையில் பிழையிலை; கரையின் குறைகளை.

August 24, 2010

தூதொடு வந்த மழை



*மிகுவெப்பமோ குறைஅழுத்தமோ
மழை பெய்வதற்கும்
காரண காரியங்கள் உண்டு.

August 21, 2010

ஆற்றுப்பெருக்கெடுத்து

ஆற்றுப் பரப்பில் பறந்து திரிந்தேன்.

விதியுடைத்து...



உயிர்மேல் ஒட்டி வரலாது
மெய்மீதே ஒட்டி உறவாவேன்.

அருவியின்கீழ்

வெண்ணீர்ச் சங்கிலிகள் தலையில்பட்டுத் தெறித்ததும்
வெந்நீர் ஒடையொன்று தொடையிடுக்கில் வழிந்தது.

August 19, 2010

குறுஞ்செய்தி

எஸ் செம் மெஸ்ஸில் வந்தது:
Walk as if you are the King
OR
Walk as if you dont care whoever the King is.

August 18, 2010

அளவு சாப்பாடு



தெரிந்த நபருக்கு
தொண்டைவலி என்றும்
மறுநாள் அழைத்து வரலாமா
என்று கேட்டபடியே
நண்பகலுண்டி பரிமாறினார் டீமாஸ்டர். 

August 17, 2010

உள் குரல்


http://manisson.blogspot.com/2010/08/blog-post_15.html

காற்றிசைச்சரத்தோடு வார்த்தை வேட்டை நிறைவுற்றதாய் எழுதியபோதும், தொங்குமணிச்சரம் தரும் காட்சிக் கிளர்ச்சி, காற்றிசைச்சரத்தில் இல்லையென்றே பிற்பாடு பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்துவிட்டது வார்த்தை வேட்கை.

एकं

एकहीछतरीकीनीचेखड़जावमेरेप्यारेअक्षरों ।

August 16, 2010

बूँदे से बातें



चिंता क्रोध निराशा
जो भी हो मनोदशा
मोती बूँदे गिरते समय
बादलों में बुद्धि उड जाय
बार बार तो वर्षा
क्यों न होता हमेशा?

August 15, 2010

தூதொடு வந்த மழை










வழியெங்கும்
வழிந்தோடுகிறது மழை
வேடிக்கைபார்ப்போர்
யாருமின்றி...

காற்றிசைச்சரம்

காற்றிலசையும் WIND CHIMES ஒரு காட்சிக்கவிதை; பலகோடிக் காவியம். ரசனை ஒதுக்கி, ராசாயனத்தை ஆராய்ந்தால்-
CHIMES என்ற வார்த்தை " A RINGING SOUND, ESPECIALLY, ONE THAT IS MADE BY A BELL" என்று NOUN ஆகவும், "TO RING " என்று VERB ஆகவும் பயன்பாட்டில் உள்ளது.

August 10, 2010

நான் உத்தமனில்லை



பரிசுத்தம் உறநான் விழைகையில்
படுகுத்தம் நிறையவே அறிகிறேன்;

August 08, 2010

விழி மூடாதிருந்தால்

விழிமூடா திருந்தால் கனவில் நிகழ்ந்தது
விளங்கியிருப்பேன்
விழிமூடியே யிருந்தால் கனவை நிகழ்த்தியது
விளக்கியிருப்பேன்.

http://manisson.blogspot.com/2010/07/blog-post_5215.html

( விளங்கியிருப்பேன்-விளக்கியிருப்பேன் என்று வார்த்தையில் விளையாடியிருந்தாலும், கனா விசாரங்களில் எனக்கு ஞானமில்லை என்பதே உண்மை. )

August 06, 2010

உள் அன்பு

கண்களுக்குப் புலப்படாத கயிற்றால் ஏதாவதொன்றோடு பிணைத்துக்கொள்ளவே என் மனம் விழைகிறது.

உள்ளேயுற்ற பற்றாக்குறையை, வெளியே பற்றி நிறைவாக்கிக்கொள்ள முற்படுகிறது. அந்தக் குறைபற்று, என்மீதே இல்லாமல் போன அன்பாக இருக்கக்கூடும். வாழ்தலில் வெறுப்பும், சக மனிதர்மீதான காழ்ப்பும் உள்ளன்பில்லாததின் வெளிப்பாடாக இருக்கலாம்.

August 03, 2010

நிரபராதம்

சால்ஜாப்புகள் நிறைந்ததாய் இருக்கிறது ஜீவிதம்.

செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள மேதகு. அகங்காரம் தயாராய் இருப்பதில்லை. ஒப்புக்கொண்டால் உள்ளேயுறும் தற்காலிக சலனத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சலனத்தை உற்றாய்ந்தால் பரிசுத்தமுறவும் நேரலாம். அதற்கு வாய்ப்பளிக்காமல், சுயவிசாரணையின் முடிவில் சாதகமாகவே தீர்ப்பெழுதப்படுகிறது, குற்றங்களை நியாயப்படுத்தியோ அல்லது ஒப்பீடு செய்து குற்றங்களை சிறியதாக்கிக்கொண்டோ.

என்ன செய்வது? குற்ற உணர்ச்சியின் குறுகுறுப்போடும், சின்னச் சின்ன சால்ஜாப்புகள் செய்து, சமாதானமாகவும் தான் நிகழ்த்த வேண்டியிருக்கிறது வாழ்க்கையை.


நமக்கென்று
ஒரு கடிகாரம் வைத்திருக்கின்றோம்

அது காட்டும் நேரம் மட்டுமே
சரியென்று நம்புவதற்கு.

ஆணவம் கொள்

ஒற்றைக்கரம் இழந்தோர் இருகாலற்றவரைக் கண்டு ஆறுதல்கொண்டால், உறுப்புகள் உருப்படியாய் இருந்தும் மாமிசப்பிண்டமென மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் நரம்புநோயாளிகள் எவரிடமிருந்து ஆறுதல் பெறுவார்?

கடன்பட்டு குடித்தனம் செய்பவர் குடிசைவாழ்பவரைப் பார்த்து சமாதானம் கொண்டால் உண்டியுடுக்கையுறைவிடம் அற்ற அகதிகளை யார் சமாதானம் செய்வது?

ஒவ்வொரு உயிருக்கென்றும் ஒரு தனிச் சிறப்பு இருக்கக்கூடும். தனித்துவம் பெற்றதற்காக (வேண்டுமானால்) ஆணவம் கொள்ளலாம்.

தோற்ற மயக்கங்கள்
மேதா விலாசங்கள்
காசு கௌரவங்கள்

இன்னபிற நீங்கியும் -

ஆணவம் கொள்
நீ நீயாய் இருப்பதற்கு!

August 02, 2010

ரண்டக்க கவிஞர் ராஜா

மெட்டு: ARR ன் Airtel Tone
பாட்டு:

தேடும் கண்கள் எங்கேயோ பார்த்த பெண்ணைத்தான்
தேனிதழ் நீரோ மழைத்துளி தானோ
தெறிக்குது அருகே பேசுற கணம்
விழி குக்குறு குறு குக்குறு குறு
நோக்கியதோ.

மெட்டு: இளைய ராஜாவின் தென்பாண்டி சீமையிலே
பாட்டு: 1

மழை பேஞ்ச ஈரத்தில
மண் மேல வெரலிழுத்து
மனம் போல கிறுக்கியவ
பேரறிவாயோ ஊரறிவாயோ


இனிமேல் அவளை காண்பாயோ
கண்டால் எனக்கு சொல்வாயோ
மழையும் ஒருநாள் பொழியாதோ
மனசும் அதிலே நனையாதோ


பாட்டு: 2

சும்மாடு தலையில் வெச்சு
கருவாடு சுமக்கிறவ
தெருவோடு நடக்கையிலே
வீசுற வாசம் மல்லிகை வாசம்.

பாரா முகமா ஏன் போறே
காசா பணமா நான் தாரேன்
நீதான் எனக்கு சரி ஜோடி
ஊரு கிடக்கு அடி போடி.

மெட்டு: இளைய ராஜாவின் NOTHING BUT WIND
பாட்டு:

ஈரம் விழிகளில் வழியுது
கடும்பாறை நெஞ்சமிது கரையுது

மழைமேகம் நீலவானம் எனக்கானதே இனி
நெடுந்தூரம் போகவேணும் விளக்காகுமே விழி.

வலிக்காமல் பிரிகிறேன் வருகிறேன்.

குரு வணக்கம்

விளை நிலமென விளங்கி னேனெனிலும்
துளி ஈரமென பொழிந்த வானமே!
வானின்றி விளைந்த நிலமுண்டோ?
வான்நின்று வாழ்த்துவீர் எமையே!

August 01, 2010

முதல் கவிதை



பள்ளிப் பறவை


நானொரு பள்ளிப் பறவை
என் சிறகில் ஒரு கறை

( ஆறாம் வகுப்பில் கவிதை போட்டிக்காக எழுதியது. இரண்டு வரிகளைத் தாண்டி என் கற்பனை வரிக்குதிரை ஓடாது நொண்டியடித்து நின்றது. )

கோலங்கள்



அடர்பனி மார்கழி இரவில்
சுடர்விழியாள் தண்ணீர் தெளித்து
வாசலில் இயற்றிய கோலாகலம்
சங்க இலக்கியம்.

மஞ்சள் பூசிய முகத்தில்
வியர்வை வைத்த புள்ளிகளில்
நெற்றிமுடி ஆடும் கோலம்
புதுக் கவிதை.

ஒரு புள்ளி
ஒரு வரிசை எனினும்
விஜயலட்சுமி- ஹை கூ

பார்வைகள் பரிமாறும்போது
ரகசியமாய் நான் வைத்த புள்ளிகளில்
ரசல் போடும் கடலை
அலங்கோலம்.

( விஜயலட்சுமிக்கு நான் one way ல் பாதை போட்டுக் கொண்டிருக்கையில் நண்பன் ரசல் by- pass ல் குறுக்கிட்டான். )