August 17, 2010

உள் குரல்


http://manisson.blogspot.com/2010/08/blog-post_15.html

காற்றிசைச்சரத்தோடு வார்த்தை வேட்டை நிறைவுற்றதாய் எழுதியபோதும், தொங்குமணிச்சரம் தரும் காட்சிக் கிளர்ச்சி, காற்றிசைச்சரத்தில் இல்லையென்றே பிற்பாடு பட்டது. மீண்டும் கிளர்ந்தெழுந்துவிட்டது வார்த்தை வேட்கை.
வார்த்தைகளோடு இத்துனை பற்று அவசியம்தானா? பொருள் தரும் கிளர்ச்சியை, காற்றுச்சரமோ, தொங்குமணிச்சரமோ- எத்துனை தூரம், எத்துனை ஆழம் வார்த்தைகளால் வடித்துவிட முடியும்? உணர்ந்தவற்றை, உள்ளவாறே வார்த்தைகளால் உருவகப்படுத்திவிட ஒண்ணுமா? உணர்கிற நிலையிலேயே எழுதினால், அது சாத்தியமெனப்பட்டாலும், எழுதத்தலைப்படும்போது, உணர்நிலை கலைந்துவிடாதா? கலைந்துவிடுமெனில், அந்த எழுத்து, எங்ஙனம் பூரணமுறும்?

வார்த்தைகள் விடுத்து, உண்மையை உள்ளவாறே உணர்கிறதறுவாயில், உவமையில்லை; வார்த்தைகளில்லை; விசாரணைகளில்லை; உண்மையின் இருத்தலும், உண்மையுணர்தலும் மட்டுமே நிகழ்ந்துகொண்டிருக்கும்.

விடாது பெறுவோ வீடு பேறு
பற்று பற்றியே அறுக.