August 30, 2010

தமிழ்க் கணக்கு



கூட்டலும் பெருக்கலும்
கணிதத்தின் அடிப்படை இயக்கங்களாம்.

கூட்டிப் பெருக்கும் தமிழ்த் தரையில்
துப்புரவாய்த் துலங்குவதும் இதுதானோ?