July 02, 2010

ரயில் சினேஹம்



உன்னோடு
நான் செய்த உறவு

தண்டவாளத்தோடு
ரயில் கொண்ட தொடர்பென
சிலாகித்திருந்தேன்.

தவறென்றுணர்த்தி-

விடைபெற்றாய்
பிரயாணியாய்.

கோபமில்லை;
சோகமுமில்லை
சிநேகிதமே!

போய் வருகிறேன்;
போகுமிடம்

வெகுதூரம்!