ஓரிலையும் அசையாத மரத்தினடியில்
Pages
Home
About Me & Mine
June 30, 2010
விழியருகில் வானம்
இழுத்து
போர்த்திக்கொள்ளமுடியாத தூரத்தில்
விரிந்திருக்கிறது வானம்.
தூரங்களைக் கறைக்கும் கற்பனைகள்
தோற்றுப்போய்த் தூங்கிவிடும் இரவுகளில்
என்மேல் கவிழ்ந்து
என்னை இறுக்கி
அணைத்துக் கொண்டுவிடுகிறது.
Newer Post
Older Post
Home