முன்னைப்போல் ஓடித்திரிய
என்னால் முடியவில்லை.
வயோதிகம் வந்ததில்
சுருங்கிவிட்டது எல்லை.
அடுத்தவரின் நிராகரிப்பும்
சுய இயலாமையும்
மரணம் வரைக்கும் நரகம்.
சுயமாய்ப்பு செய்து கொள்ளவும்
சமாதானம் இல்லாமல்
வந்துவிழும் பண்டங்களுக்காக
படியோரம் படுத்திருக்கிறேன் -
ஆறாத புண்களை நக்கியபடியும்
ஈனக்குரலில் குரைத்தபடியும்.