பிரபஞ்சப் பெருந்திரையில்
பல்முகங்கள் பலதினுசுகளாய்
கதாபாத்திரங்களாக்கி
அனாவசிய நீள அகலங்கள்
அவ்வப்போது நீக்கி
டைரக்டராய் எடிட்டராய்
இருந்திருக்குமோ இறந்திருக்குமோ
சிருஷ்டிகர்த்தா?
யாரோவின் மூச்சுக்காற்றாய்
தென்றலை ஸ்பரிசிக்கையில்
சமாதானமாய் இருக்கிறது -
இங்கேதான் இருக்ககூடும்
எங்கேனும்.