March 25, 2015

ஸ்பெஷலாய்ப் பெய்யும் மழை

விரித்து உதறி 
உலர்த்துவதற்கு முன்னால் 
 
சுருட்டிப் பிழிந்த ஈரத் துணிகள் 
கொடிக் கயிற்றில் 
வரிசையாகத் தொங்கும் 
 
ஒவ்வொரு உடுப்பிலும் 
எஞ்சிய ஈரம் 
ஓரங்களில் வடிந்து 
திவலையாய்  ஒழுகி 
பாத்திரங்கள் மீது 
பட்டுத் தெறிக்கும் 
 
ஓசை கேட்டு 
எட்டிப் பார்த்தேன் 

எனக்கென்று 
ஸ்பெஷலாய்ப் பெய்யும் மழையில் 
கொஞ்சம் தலை நனைத்தேன்.