October 11, 2011

வேறென்ன செய்ய

அவர்கள் அப்படித்தான்.
அப்படியான கற்பிதம் கொண்டவர்கள்
அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்
அப்படித்தான் பேசுவார்கள்
என்பதை அறிந்தவுடன் பிறக்கும்
சிறு புன்னகை ஒரு மௌனம்
தோல்வியின் வெளிப்பாடு என்றோ
சாட்டிய குற்றத்திற்கான ஒப்பம் என்றோ
அர்த்தப்ப்படும்போது என்ன செய்ய முடியும்? 
பின்றையொரு பொழுதில்
அவர்களுக்கும் அப்படியான ஒரு சந்தர்ப்பம் நிகழலாம்
அப்பொழுதில் சரியான அர்த்தம் விளங்கக்கூடும்
என்று அதிகபட்ச அன்போடு
மனசுக்குள் ஆசிர்வதித்ததைத்தவிர
வேறென்ன செய்ய முடிந்தது உன்னால்?