அறையை கூட்டிப் பெருக்கி
சிறுநீர் கழித்துவிட்டு
வந்தமர்ந்தேன்.
புத்தகம் வாங்கி
பத்து நாட்கள்
ஆகிவிட்டன.
WHAT IS MATHEMATICS.
முன்னுரையை மட்டும்
மூன்று நாட்களாய்
படித்துக் கொண்டிருக்கின்றேன்.
இன்றிரவுக்குள்
இருபது பக்கங்களாவது படித்துவிடவேண்டும்.
வியூகம் வகுத்தேன்.
முதல் வரி படிப்பதற்கு முன்னரே
கூட்டிக் கழித்து
பெருக்கி வகுத்து
அடிப்படை கணக்கை நிகழ்த்தியிருந்தேன்.