August 24, 2010

தூதொடு வந்த மழை



*மிகுவெப்பமோ குறைஅழுத்தமோ
மழை பெய்வதற்கும்
காரண காரியங்கள் உண்டு.

பெய்கிறது என்பதைக் காட்டிலும்
நனைவதற்கு நல்ல காரணம் ஏது?
நனைதல் நீக்கி நல்ல காரியம் ஏது?

*ஓடாமல் ஒளியாமல்
ஆடாமல் அசையாமல்
அழகாய் மழையை ரசிக்கிறது
அந்த ஒற்றை எருமை.

*சட்டி நீரை கவிழ்த்தாற்போல்
கொட்டும் மழையில் நனைதல் சிறப்பு.

கொட்டித் தீர்த்த பின்பும்
விட்டுப் பெய்யும் தூறலே உவப்பு.

தூறல்களும் தீர்ந்த பிறகு
தீர்த்தமாய்த் தெளிக்கும் சாரலில் சிறு களிப்பு.

எது எப்படியோ...

நெருங்கிப் பேசுகையில்
தெறிக்கும் உன் எச்சில்போல்
சிலிர்ப்பாய் இருப்பதில்லை எந்த மழையும் .

(தூது வரும்)