August 18, 2010

அளவு சாப்பாடு



தெரிந்த நபருக்கு
தொண்டைவலி என்றும்
மறுநாள் அழைத்து வரலாமா
என்று கேட்டபடியே
நண்பகலுண்டி பரிமாறினார் டீமாஸ்டர். 

வழக்கத்தைவிட சற்று மிகையாகவே
விழுந்தன
வார்த்தைகளில் பரிவும்
பொரியலின் அளவும்.