அடர்பனி மார்கழி இரவில்
சுடர்விழியாள் தண்ணீர் தெளித்து
வாசலில் இயற்றிய கோலாகலம்
சங்க இலக்கியம்.
மஞ்சள் பூசிய முகத்தில்
வியர்வை வைத்த புள்ளிகளில்
நெற்றிமுடி ஆடும் கோலம்
புதுக் கவிதை.
ஒரு புள்ளி
ஒரு வரிசை எனினும் விஜயலட்சுமி- ஹை கூ
பார்வைகள் பரிமாறும்போது
ரகசியமாய் நான் வைத்த புள்ளிகளில்
ரசல் போடும் கடலை அலங்கோலம்.( விஜயலட்சுமிக்கு நான் one way ல் பாதை போட்டுக் கொண்டிருக்கையில் நண்பன் ரசல் by- pass ல் குறுக்கிட்டான். )