August 21, 2010

விதியுடைத்து...



உயிர்மேல் ஒட்டி வரலாது
மெய்மீதே ஒட்டி உறவாவேன்.

வாக்கியம் முடிவுற்ற போழ்தே புள்ளி
ஒற்றென வருவேன் நானே- மங்கள
பாக்கியம் விதியற்ற போழ்தே நெற்றிப்
பொட்டென வீழ்வேன் வீணே.

நீள வாசலில் கோலமென விழுந்தேன்
கோல நுதலில் ஓர்புள்ளிக் கோலமென
கோலோச்சி னேனென்னை அலையடித்து அழித்ததுவே
ஆழமறிய வொண்ணா ஆழிவிதி.

விதியுடைத்து-

அறமிகு கைம்பெண்டின்
ஈரமிகு நெற்றியில்
திலகமெனத் திகழவே விழைகிறேன்.

( ஊக்கம்: வேணுவின் " குழப்பம் " )
( வார்த்தை விளையாட்டு... உண்மை இல்லை )