September 15, 2010

தூதொடு வந்த மழை


உன்னை
தீண்டித் தழுவிய தேகத்தில்
இன்னும் ஒட்டியிருக்கிறது
மலர்ந்த பெண் வாசனை
தலைதுவட்டி
உடல் துடைத்த பின்பும்
கெண்டைக்காலைக் கட்டியிருக்கும்
உலர்ந்த மண் வாசனை போல.