நீர்மீது
நடந்து சென்றது
காற்று.
எழுத்தாளர்
இத்தோடு
மரித்து விடுகிறார்.
காற்றெழுப்பிய
நெளிவு சுழிவுகளைக் கலைத்து
வட்ட அலைகளை வரைந்தபடி
மூழ்கியது மண்துகள் ஒன்று.
இன்னும் சில வினாடிகள்
ஆயுள் நீடித்திருக்கலாம்.
நீர்ப்பரப்பில் நிகழ்ந்தவற்றை
மரித்தவரும் மூழ்கியதும்
எடுத்தியம்பார்.
நின்று
நிதானமாய்
ரசித்துவிட்டு
போங்கள்.
( அரைகுறைப் புரிதலில் கூத்தாடிய குடமானேன். )
நடந்து சென்றது
காற்று.
எழுத்தாளர்
இத்தோடு
மரித்து விடுகிறார்.
காற்றெழுப்பிய
நெளிவு சுழிவுகளைக் கலைத்து
வட்ட அலைகளை வரைந்தபடி
மூழ்கியது மண்துகள் ஒன்று.
இன்னும் சில வினாடிகள்
ஆயுள் நீடித்திருக்கலாம்.
நீர்ப்பரப்பில் நிகழ்ந்தவற்றை
மரித்தவரும் மூழ்கியதும்
எடுத்தியம்பார்.
நின்று
நிதானமாய்
ரசித்துவிட்டு
போங்கள்.
( அரைகுறைப் புரிதலில் கூத்தாடிய குடமானேன். )