வெக்கையைக் கசக்கிப் பிழிந்துவிட்டு
நீண்ட நாள் ஜுரம் வடிந்து
குளிர்ந்து கிடக்கிறது மண்
கோடையை
ஏதோவொரு தூரதேசத்திற்கு வழியனுப்பி ஆயிற்று
கொடுங்கோல்தான்
கொடூரக் கொடுமைதான் என்றாலும்
ஊர்முழுக்க
சோகமாய் ஒரு சோம்பல் பரவியிருக்கிறது.