October 04, 2014

நேர்முகம்

நான்கைந்து இருசக்கர வாகனங்கள் 
வரிசையாக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் 
அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தந்தானே அது

போக்குவரத்து நெரிசல் மிகுந்த 
மாநகரச் சாலையின் ஓரத்தில் 
அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்பாக 
எனது வாகனத்தையும் நிறுத்திவிட்டு 
மாமன்மகனின் நேர்முகத் தேர்விற்காக 
இருவரும்  நுழைந்தோம்
கட்டிடத்தின் உள்ளே
தேர்வு முடிந்து 
மூன்று மணிநேரங்கள் கழிந்து 
நுழைந்த வழியாகவே 
வெளி வந்தோம் இருவரும்
நிறுத்திய இடத்தில் 
ஒருவண்டியையும் காணாது 
திகைத்து நின்றேன் 
அடித்துச் சொன்னான் 
மாமன்மகன்:
'இதுவல்ல 
கட்டிடத்தின் முகப்பு 
பின்புறம் இருக்கிறது'
பாவம்
அந்த அடுக்குமாடிக் கட்டிடம்.