April 30, 2014

அந்த நீலம்

மச்சுவீட்டு மதில்மீது
படரும் பசுங்கொடியில்
பூத்திருக்கும் அடர்நீலம்

மதியப் பொழுது 
வழியே கடக்கையில்
மேயும் விழிகளை நிறுத்தி
இமைகள் விரியச் செய்யும்

காட்சிகள் மறைய
இமைக்குள் இறங்கி
முழுதாய் பாரிக்கும்
அந்த நீலம்

இரவுவேளையில்
இருளோடு இரண்டறக் கலந்து
இல்லாதிருக்கும்

அதே நீலம்

புலர்பொழுதை
இமைக்காமல் விழிக்கும்
பீலியின் நயனம்

விடிந்தும் விலகாத
இரவின் ஞாபகம்.