சிகரெட்டுப் புகை
சீக்கிரம் வெளியேற
பாதி உயர்த்திய
கழிப்பறைச் சாளரத்து
வலை வெளியே
கொசு நுழையவும்
வீடு திரும்பிய
என் வழியில்
பனி இரவு
அருகிய ஆளரவம்
கிளம்பிய அவசரம்
இரைந்த வயிறு
பணியிடத்துச் சீற்றம்
புளகாங்கிதம்
ரசித்த வாசிப்பு
அலைபேசி அரட்டை
மனைக்கு ஒதுக்காத நேரம்
நினைவில் மங்கிய கடமை
என
குசலம் விசாரித்து
வீடு திரும்பி
வலை வழியே
கழிப்பறைக்குள் குதித்து
படுக்கை நெருங்கி
எனை அடைந்த பொது
உறங்கிப் போயிருந்தேன்.