January 08, 2013

ஓரிலையும் அசையாத மரத்தினடியில் - கவிதைத் தொகுப்பு

எனது முதல் கவிதைத் தொகுப்பு,  'ஓரிலையும் அசையாத மரத்தினடியில்', உயிர்மை பிரசுரமாக வெளியாகி உள்ளது. பள்ளிக்காலந் தொட்டு, எழுதியவற்றையெல்லாம் ஆஹா ஓஹோ என்று பாராட்டும் என் அம்மா, நூலகத்தில் இருந்து கவிதை நூல்களை வாசிக்கத் தந்து, எனது கவிதைகளை வாசித்து ஊக்கப்படுத்திய பௌதிக ஆசிரியர்கள், டைரியில் எழுதிக் கொண்டிருந்தவனை வலைப் பக்கத்தில் எழுதச் சொல்லி, தொடர்ந்து தொகுப்பாக வெளியிட அறிவுறுத்தி, பாதை தவறும் பொழுதுகளில் திசை காட்டும் நண்பன் வசந்த், உடனிருந்து உற்சாகப்படுத்திய நண்பர்கள் நாகராஜ், வேணு, பசுபதி மற்றும் 'துரோணா' விஷால் , நல்ல கவிதைகளை மனந் திறந்து பாராட்டியும் தொகுப்பாக்கவும் ஊக்குவித்த வல்லினம் நவீன், கவிதைகளை வெளியிட்டு அங்கீகரித்த திண்ணை,உயிரோசை,காட்சி, சொல்வனம், மற்றும் வல்லினம் இதழ்கள், நினைத்திருந்த வடிவத்தில் புத்தகத்தை வெளிக்கொணர்ந்த உயிர்மை திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் உயிர்மை ஊழியர்கள் ஆகியோரை நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள், இத்தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றன.