இத்துடன் இரண்டாவது முறை இன்றைக்கு.
பழைய கோபம். பேசித் தீராது.
ஆப்பிள் சாப்பிடச் சொல்கிறான்.
வயிறு நிரம்பியிருக்கிறது.
சாப்பிடத் தோன்றவில்லை.
ஏழுமணிக்கெல்லாம் எழவேண்டும்.
இப்போதே படுத்தால் சரியாயிருக்கும்.
ஒரு தேவாலயத்தில்
விருந்து பரிமாறுகிறார்கள்
மங்கலான வெளிச்சத்தில்.
அம்மாவும் நானும் சாப்பிடுகிறோம்
சம்பந்தமே இல்லாமல்.
ஆங்காங்கே நிர்வாண உடல்கள்
இரண்டிரண்டாய்
ஒன்றின் மீது இன்னொன்று மல்லாந்தபடி.
உற்றுப்பார்த்தால் தெரிகிறது ஆண்களென்று.
அவள்தான் அழைக்கிறாள் மறுபடியும்.
நேரங்கடத்த பேசலாம்.
எவருடனோ அவள் பேசுவதுதான் கேட்கிறது.
எல்லோரும் கைகழுவுகிறார்கள்.
விழித்துக்கொண்டதும் பசி தெரிகிறது.
பசித்ததால் விழிப்பு வந்ததாகவும் இருக்கலாம்.
தேடிப் பிடித்து ஆப்பிளை கொறிக்கிறேன்.
கண்கள்மூடி அசைபோடுகிறேன் மெல்ல
வெகுநாட்களுக்குப்பிறகு அழைத்திருந்தாள்.
பழைய கோபம். பேசித் தீராது.
ஆப்பிள் சாப்பிடச் சொல்கிறான்.
வயிறு நிரம்பியிருக்கிறது.
சாப்பிடத் தோன்றவில்லை.
ஏழுமணிக்கெல்லாம் எழவேண்டும்.
இப்போதே படுத்தால் சரியாயிருக்கும்.
ஒரு தேவாலயத்தில்
விருந்து பரிமாறுகிறார்கள்
மங்கலான வெளிச்சத்தில்.
அம்மாவும் நானும் சாப்பிடுகிறோம்
சம்பந்தமே இல்லாமல்.
ஆங்காங்கே நிர்வாண உடல்கள்
இரண்டிரண்டாய்
ஒன்றின் மீது இன்னொன்று மல்லாந்தபடி.
உற்றுப்பார்த்தால் தெரிகிறது ஆண்களென்று.
அவள்தான் அழைக்கிறாள் மறுபடியும்.
நேரங்கடத்த பேசலாம்.
எவருடனோ அவள் பேசுவதுதான் கேட்கிறது.
எல்லோரும் கைகழுவுகிறார்கள்.
விழித்துக்கொண்டதும் பசி தெரிகிறது.
பசித்ததால் விழிப்பு வந்ததாகவும் இருக்கலாம்.
தேடிப் பிடித்து ஆப்பிளை கொறிக்கிறேன்.
கண்கள்மூடி அசைபோடுகிறேன் மெல்ல
வெகுநாட்களுக்குப்பிறகு அழைத்திருந்தாள்.