அது
ஞாபகமிருந்தது
அவ்வளவுதானே
பூர்வ ஜென்மங்கள்
ஞாபகத்திற்கு வந்துவிடவில்லையே
அறிந்திருந்தாய்
அவ்வளவே
அறியவொண்ணாததை
அறிந்திருக்கவில்லையே
இத்தனை
இரைச்சல்
தேவைதானா
ஆர்ப்பரித்து
பறைசாற்றி
கவனம் ஈர்த்து
கனம் கூடியதே
அன்றி
வேறென்ன கூடி வந்தது
இவ்வளவு சொல்லியும்
புத்தியில் உறைக்காமல்
சொன்னதையே
அடுக்கடுக்காய்
எழுதிக்கொண்டிருப்பவனை
புத்தர்கள்தாம்
கரைசேர்க்க வேண்டும்.