November 06, 2013

கோட்டைவிட்ட காவலாளி

மருத்துவமனை வளாகத்தில்
ரோந்து போகிறார்
இரவுநேரக் காவலாளி.

கறாரானவர்.
லேசில் விடமாட்டார்
அகப்பட்டவர்களை.

இன்னும் கொஞ்சம்
கறாராய் இருந்திருக்கலாம்.
எப்படியோ தப்பியோடி
என்செவிகளில் வந்துவிழுகிறது
அவர்கைவசமிருக்கும் அலைபேசியிலிருந்து
வழியும் இசை.

( நன்றி : சொல்வனம் )