March 07, 2011

சொல்வன்மை

புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடியது -

           பிணிகளின் பட்டியலல்ல
           கைவிடுதலின் புத்திகூறல்ல
           திசைதிருப்பலின் வழிமுறைகளல்ல
           மாற்றுகளின் அறிமுகமல்ல
           நன்றுகளின் உன்னதம் பற்றியதல்ல  
           வந்தவை போனவையின்
           கணக்கு வழக்கல்ல 
    
புகைத்து விட்டு
வந்திருப்பவரிடம்
சொல்லக் கூடாதது -

           யாரோ புகைத்துவிட்டு வந்திருக்கிறார்கள்
           என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.