கண்ணை மூடி
தூங்குங்க தாத்தா-
மஞ்சள் காமாலையால்
மூளை மழுங்கி
மூச்சிரைக்க
அழுது பிதற்றிக்கொண்டிருந்தவரின்
நெஞ்சுக்கூட்டில்
தட்டிக் கொண்டிருக்கிறாள்
கிருஷ்ணவேணி சிஸ்டர்.
தாய்த் தீண்டலின் கதகதப்பில்
தூங்கிப்போகிறது குழந்தை.
வயதுகளை
கூட்டியும் குறைத்தும்
சமன்படுகிறது காலம்.